’நம்பி வாப்பா...’ எடப்பாடியின் பகீர் ஆடியோ... தினகரனின் அடுத்த அதிரடி அஸ்திரம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 25 Oct, 2018 04:51 pm
nambi-vappa-is-the-next-audio-next-action-of-ready-to-t-t-v-dhinakaran

’எம்.பி.,க்கு பிறந்த தம்பி பாப்பா’ என சில நாட்களுக்கு முன் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணை அம்மா ஆக்கியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளம்பியது. அந்த ரணகளம் அடங்குவதற்குள் எடப்பாடி அணி தொடர்பான ‘நம்பி வாப்பா..’ என்கிற மற்றொரு ஆடியோவை வெளியிட்டு குதூகலம் அடையத் தயாராகி வருகிறது தினகரன் அணி.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்து இருக்கிறது உயர்நீதிமன்றம். ஆனாலும், ஒரு மாதத்திற்கு முன்பே டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களை வளைக்கும் வேலையை ஜக்கையன் மூலம் முதல்வர் தரப்பு செயல்படுத்திய தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.

ஓ.பி.எஸ் அணியிலிருந்த ஜக்கையன், எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துவிட்டார். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியாக இருந்தாலும் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சை மீறி ஜக்கையன் செயல்பட்டதில்லை. அப்படிப்பட்ட ஜக்கையன், எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றதில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. தவிர, பொருளாதாரரீதியாக சில பிரச்னைகளில் சிக்கியிருந்தார் ஜக்கையன். அதையும் எடப்பாடி பழனிசாமி சரிசெய்துவிட்டார் என்கிறார்கள்.

 

இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் சிலரிடம் போனைக் கொடுத்து, எடப்பாடியிடம் நேரடியாகப் பேச வைத்திருக்கிறார் ஜக்கையன். இதுகுறித்து பகிர்ந்து கொண்ட அ.ம.மு.க நிர்வாகி, ’வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் தினகரன் பக்கம் இருந்து சில எம்.எல்.ஏ-க்களை வளைக்கத் திட்டமிட்டார் எடப்பாடி. இதற்கு ஜக்கையனை பயன்படுத்திக் கொண்டார். தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் சிலரிடம் ஜக்கையன் பேசியிருக்கிறார். அவர் பேசியதை ஆடியோவாக ரெக்கார்ட் ஆதரவாளர்கள் தினகரனிடம் கொடுத்துள்ளனர்.

ஒரு ஆடியோவில் பேசும் ஜக்கையன், `தினகரனை நம்பி என்ன பிரயோஜனம்? எடப்பாடி பழனிசாமி நல்லபடியாக பார்த்துக்கொள்கிறார். நீங்களும் இந்தப் பக்கம் வந்துவிடுங்கள்' என்கிற ரீதியில் பேசுவதாக இருக்கிறதாம். தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, ஆளும்கட்சி தரப்பில் நெருக்கடிகள் அதிகரிக்கும்போது இந்த ஆடியோவை தினகரன் தரப்பு வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறது’ என்கிறார்கள்.  

இன்னும் எதெற்கெல்லாம் ஆடியோக்கள் வெளியாகப்போகிறதோ..? 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close