ஊறுகாயாகப் பயன்படுத்தப்படும் மக்கள்?

  பாரதி பித்தன்   | Last Modified : 25 Oct, 2018 06:55 pm
madras-high-court-s-18-mla-judgement

ஜனநாயகத்தின் ஆணி வேர் மக்கள். அவர்களுக்குசேவை செய்வதற்காகத்தான் மக்கள் பிரதிநிதிகள். நடைமுறை என்னவோ தலைகீழாகத்தான் இருக்கிறது.

ஜனநாயகம் தெரியாத வெளிநாட்டு பிரமுகர் ஒருவர் தலைநகரில்,தொழிற்சாலை வாசலில் அதிக எண்ணிக்கையில் சைக்கிள் நிற்பதை பார்த்துவிட்டு இதுஎன்ன இத்தனை சைக்கிள் இங்கே நிற்கிறது என்று கேட்டுள்ளார். அதற்கு இந்த நாட்டின் மன்னர்கள் தங்கள் வாகனங்களை வெளியே நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றுஉள்ளனர் என்றுமொழிபெயர்பாளர் பதில்சொன்னாராம். சிறிது நேரத்தில் அனைத்துவாகனங்களும் நிறுத்தப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. சாலையேவெறிச்சோடியது. அப்போது சைரன் வைத்த கார் போலீஸ் பாதுகாப்புடன் விரைந்துசென்றது. அதை அவர் இது என்ன என கேட்க இந்நாட்டுமந்திரிகள் கடமை ஆற்ற செல்கின்றார் என்று பதில் சொன்னாராம்.

அதைப்போல மக்கள்சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏகள் தகுதி பற்றிய வழக்கால் சுமார் ஒரு ஆண்டு ஒருமாதம் தகுதியை இழந்ததால் தங்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே அந்த தொகுதிகள் தவிக்கினறன. இது தேர்தல் நடந்து அடுத்த எம்எல்ஏ தேர்வு பெறும் வரை தொடரும். கடந்த 2016 டிசம்பர்  5ம் தேதி ஜெயலலிதா இறந்த பின்னர் சசிலகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று விரும்பி இருந்தால் எந்த பிரச்னையும் இருந்து இருக்காது.  

அப்போது பன்னீர் செல்வத்தை பதவியில் அமர்த்திய அவர்கள் கடைசிவரை அவரையே ஆட்சி செய்ய விட்டு இருக்கலாம். ஆனால் அவ்வாறு இல்லாமல் கடந்த 2017 செப்டம்பர் 7ம் தேதி அவரை ராஜினாமா செய்ய வைத்தார். பின்னர் கவர்னர் அழைப்பு விடுக்காததால் சசிகலாவிற்குபதிலாக ஒரே நாளில் எடப்பாடிமுதல்வராக தேர்வு செய்யப்படுகிறார். அதன்காரணம் என்ன என்பதை இன்றுவரை தினகரன் அணி வாய் திறக்கவே இல்லை. இந்த டீலிங் மர்மத்தை தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் வெளியிடலாம் என்று நினைத்திருக்கிறார்களோ என்னவோ தினகரனுக்கேவெளிச்சம்.

அதே நேரத்தில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் கொண்டு வந்த நம்பிக்கைகோறும் தீர்மானத்தில் தற்போது தகுதி நீக்கம்செய்யப்பட்ட 18 எம்எல்ஏகளும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக 11 எம்எல்ஏகள் ஆதரவு அளித்து அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.  இந்த அரசியலில் இது முக்கியமான இடம்.

அடுத்தகட்டமாக ஆகஸ்ட் 21ம் தேதி இருஅணிகளும் இணைகிறது. நம்பிக்கைகோறும் வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏகள்த குதி இழக்கவில்லை. அதைவிடக் கொடுமை 2 பேர் அமைச்சராகவே மாறிவிட்டனர். ஆனால் 2017 செப்டபர் 7ம் தேதி ஆளுனரைப் பார்த்து முதல்வரை மாற்ற வேண்டும் என்று மனுக் கொடுத்த எம்எல்ஏகள் மட்டும் சபாநாயகர் பார்வையில் தகுதி இழுந்து விட்டார்கள். இதுவரையில் சட்டசபையில் இருந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்தன.

ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இருந்தால் ஒரே வாரத்தில் இந்தவழக்கை விசாரி்த்து தீர்ப்பு அளித்திருக்கலாம். அல்லது 2 நீதிபதிகளுக்கு பதிலாக 3 அல்லது 5 நீதிபதிகள் விசாரித்து பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தை தீர்ப்பாக வழங்கி இருக்கலாம். மரபின் பெயரால் 2 நீதிபதிகள்விசாரி்த்து, அதில் மாறுபட்ட தீர்ப்பு வெளிவரவே தற்போது 3வது நீதிபதி பதில் அளித்திருக்கிறார் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று. இந்த தீர்ப்பு சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்தை நிரூபித்து இருக்கலாம். ஆனால் இடைத்தேர்தல் வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அல்லது லோக்சபா தேர்தல்வரை தள்ளிப்போகலாம். அதுவரையில் எம்எல்ஏகள் இல்லாத தொகுதியாக அது நீடிக்க வேண்டும். ஆளும் கட்சியின் அரசியலுக்கு பலிகடா மக்கள். அவர்களுக்கு ஆதரவாக யாரும் பேசவில்லை என்பதே அனைத்து அமைப்புகளுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இந்த வழக்கில் என்ன தீர்ப்பு கூறியிருக்கலாம் என்றால், எம்எல்ஏகள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு கூறியிருக்கலாம். ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்ட எம்எல்ஏவே மந்திரி ஆக முடியும் என்றபோது, கவர்னரை சந்தித்து மனுக்கொடுத்தது உலகமகா பாவம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அல்லது எம்எல்ஏகள் கட்சி கட்டுப்பாட்டை மீறிஇருப்பதால் தகுதி நீக்கம்செல்லும்என்று அறிவித்து, தேர்தல் முறைகேடுகள் காரணமாகதேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ செல்லாது என்று கூறும் போது அடுத்த இடத்தில்இருப்பவரை எம்எல்ஏவாக அறிவிப்பதைப் போல இந்த தகுதி இழப்பிலும் அறிவித்து இருக்கலாம். இதனால்சம்பந்தப்பட்ட தொகுதிக்குமீண்டும் தேர்தல் செலவு ஆவதை தடுப்பதுடன், உடனடியாக ஒரு எம்எல்ஏ கிடைத்துவிடுவார். இப்படி தீர்ப்பு இருந்தால் ஆளும், அல்லது எதிர்கட்சிகளுக்கு நாம் சரியாக இல்லாவிட்டால் அவர் வந்துவிடுவார் என்ற பயம் இருக்கும். தேர்வு பெற்ற ஆட்சியும் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்ய முடியும்.

ஆனால் இதை யாரும் செய்யமாட்டார்கள். இவர்களது போதைக்கு கிடைத்த ஊறுகாய் தானே மக்கள்.

- பாரதி பித்தன்
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close