மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை!

  Newstm Desk   | Last Modified : 26 Oct, 2018 12:49 pm
rajinikanth-discussion-with-their-executives

சென்னையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டுப்பாடுகளை மீறி ஊடக விவாதங்களில் பங்கேற்ற 15 பேரை நீக்கம் செய்து உத்தரவிட்டார் ரஜினி. இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மன்றத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் தனது பார்வைக்கு வந்த பின்னரே செயல்பாட்டுக்கு வருவதாகவும், அரசியலில் மாற்றம் ஏற்படுத்தவே தாம் அரசியலுக்கு வருவதாகவும், பதவி,பணத்தை எதிர்பார்ப்பவர்கள் தன்னிடம் வரவேண்டாம் என்றும் அதிரடியாக அறிவித்தார். 

இதையடுத்து, சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த், தனது மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாமா என்ற அடிப்படையில் ஆலோசனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close