Breaking: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு- தினகரன் அணியினர் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2018 01:03 pm
disqualilfied-mlas-going-to-appeal-in-sc-against-madras-hc-verdict

சட்டப்பேரவைத் தலைவர் செய்தது தவறு என்பதை சுட்டிக்காட்டும் பொருட்டு, தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். 

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, சபாநாயகர் எடுத்த முடிவு சரிதான், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. தமிழக அரசியல் சூழலில் இந்த தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே நேற்று முன்தினம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும்  குற்றாலம் சென்றிருந்தனர். நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். 

இந்நிலையில் இன்று அவர்களுடன் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை நடத்தினார். மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.

ஆலோசனைக்கு பின்னர் தங்கத்தமிழ்ச் செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரனின் ஒப்புதலோடு தான் இந்த முடிவு எடுத்துள்ளோம். சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நிறைய குறைபாடுகள் உள்ளன. சட்டபேரவைத் தலைவர் மிகப்பெரிய தவறு செய்துள்ளார். இதை இந்த உலகிற்கு எடுத்துரைப்போம். 30 முதல் 90 நாட்களுக்குள் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்" என்கிறார். 

இதற்கிடையில் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார். 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் பதவிக்கு வருவோம் எனவும் குறிப்பிட்டார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close