தகுதிநீக்க வழக்கு: சபாநாயகர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 03:55 pm
mlas-disqualification-case-speaker-files-caveat-petition-in-sc

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, சபாநாயகர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் சூழலில் முக்கியமானதாக பார்க்கப்பட்ட, 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து இன்று மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் தங்கத்தமிழ்ச் செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். அதே நேரத்தில், நாளையே தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்தித்து 18 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார். 

இதன் தொடர்ச்சியாக, சபாநாயகர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிடிவி தினகரன் அணியினர் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், தங்களின் கருத்தை கேட்காமல் நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என இந்த கேவியட் மனுவை சபாநாயகர் தாக்கல் செய்துள்ளார்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close