போக்குவரத்து ஊழியர்களுக்கு 20% போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 26 Oct, 2018 05:22 pm
diwali-bonus-announced-for-tn-transport-workers

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் 23ம் தேதி தீபாவளி போனஸ் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி,  லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ், நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதாவது, 8.33% போனஸ், 11.67% கருணைத்தொகை என சேர்த்து மொத்தமாக 20% போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,44,045 போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close