அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த டிடிவி நிர்வாகி கைது!

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2018 09:02 am
ttv-dinakaran-party-executive-arrested-by-police

அமைச்சர் ஜெயக்குமார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக, டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாராபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் டிடிவி தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் அவர் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணை ஏமாற்றி, அவர்கள் இருவரும் ஒரு குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளத்தில் அமைச்சரும், அந்த பெண்ணின் தாயாரும் பேசிய ஒரு ஆடியோ வைரலானது. இதுகுறித்து அமைச்சர், 'அது மார்பிங் செய்யப்பட்ட ஆடியோ' என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close