நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்; கூச்சல், குழப்பம் இல்லை: தினகரன் பேட்டி

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2018 04:48 pm
ttv-dinakaran-press-meet

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் உள்பட கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், ஆலோசனைக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் எதுவும் நடக்கவில்லை என அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தினகரன். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எம்.எல்.ஈக்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சபாநாயகர் செய்தது தவறு என்பதை நிரூபிக்கவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். அதே நேரத்தில் இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார். 

மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் எதுவும் நடக்கவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் உள்பட கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒன்றாக சேர்ந்து அனைத்திலும் வெற்றி பெறுவோம்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close