மேலும் 3 எம்.எல்.ஏக்கள் பதவிக்கு சிக்கல்?

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2018 01:40 pm
aiadmk-targets-ttv-dinakaran-supporters

அ.தி.மு.கவில் உள்ள டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என சபாநாயகருக்கு, அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார். 

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில், எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தங்கத்தமிழ்ச் செல்வன் தெரிவித்தார். 

அதே நேரத்தில் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் அதில் வெற்றி பெற்று மீண்டும் பதவிக்கு வருவோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து மேலும், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள்  மூவரின் பதவிக்கு சிக்கல் வந்துள்ளது. இரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆககிய மூன்று பேரும் அ.தி.மு.கவில் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். ஆனால்,இவர்களுக்கு அ.ம.மு.கவிலும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து இவர்கள் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க சபாநாயகருக்கு, அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார். 

ஏற்கனவே தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் மேலும் மூவரின் பதவிக்கு சிக்கல் வந்துள்ளது தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close