’சர்கார்’ விவகாரம்... மீண்ட எடப்பாடி.. வீழ்ந்த விஜய்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 27 Oct, 2018 03:11 pm
sarkar-affair-recovering-overcoming-vijay

எடப்பாடி பழனிசாமி ’சர்காருக்கு’ இருந்து வந்த சிக்கல் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், விஜயின் ’சர்காருக்கு’ பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது

தனது கதையைத் திருடி ‘சர்கார்’ படத்துக்கு பயன்படுத்தியதாக வருண்  ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதும், சர்கார் பற்றிய சன் பிக்சர்ஸின் அறிவிப்புகளும், டீசர், ட்ரெய்லர்களும் வெளிவந்து கொண்டாட்டமும், திண்டாட்டமும் ஒன்றாக கலந்தடிக்க, பல்ஸ் எகிறிக் கிடந்தார்கள் விஜய் ரசிகர்கள். வருண் ராஜேந்திரன்  எழுதிய கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான் என எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் உறுதிப்படுத்தி இருப்பதால் சர்கார் படத்திற்கு சிக்கல் உருவாகி இருக்கிறது. இதனால், அறிவித்திருந்த 6ம் தேதிக்கு பதில் 2ம் தேதியே முன்கூட்டியே ரிலீஸ் செய்யப்போவதாக தகவல் பரவியது. 

விசாரித்தால் முன் கூட்டியே வருவதற்கான முயற்சிகள் இல்லை என்கிறார்கள். சர்கார் பட விவகாரம் குறித்து வருண் ராஜேந்திரன்  நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அவர் தரப்பு சாட்சியங்கள் படு ஸ்டிராங்காக இருக்கிறது. தேவைப்பட்டால் நானே சாட்சிக் கூட்டில் ஏறி சாட்சி சொல்லவும் தயார் என்று கூறிவிட்டார் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ். (குறிப்பு.. கே.பாக்யராஜ் சமீபகாலமாக அ.தி.மு.க மேடைகளில் ஏறி வருகிறார். எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழாவில் கவனிக்கப்பட்டார். அவர் விரைவில் அதிமுகவில் இணையக்கூடும் என்கிற தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. )ஒருவேளை வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், அது படத்தின் ரிலீசை பாதித்தவிடக் கூடும். வரும் 30ம் தேதி அந்தத் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. அதன் பிறகே 2ம் தேதி ரிலீசாகிறதா? 6ம் தேதி ரிலீசாகிறதா..? அல்லது படமே முடக்கப்படுகிறதா என்கிற நிச்சயத்தன்மை வெளிப்படும்.

இதற்குப் பின்னால் மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிர்வாகம், தமிழகத்தின் சினிமா புள்ளிகள் சிலரின் பெயரை சொல்லி அவர்களுக்கு சர்கார் படத்தின் விநியோக உரிமை போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது. அதையடுத்து இந்த பிரமுகர்கள் ஒதுக்கப்பட்டு விட்டார்கள். தமிழக தியேட்டர் வட்டாரத்தில் செல்வாக்காக இருக்கும் இவர்கள், சர்காருக்கு எதிராக விஜய் ஆண்டனியில் ’திமிரு புடிச்சவன்’ படத்தை கொம்பு சீவி இறக்கப் போகிறார்கள். ஒருவேளை 2 ம் தேதி படத்தை வெளியிட்டால், இதுதான் சாக்கு என்று 6ம் தேதி சர்காரை தியேட்டரிலிருந்து தூக்கிவிட்டு எல்லா தியேட்டர்களிலும் திமிரு புடிச்சவன் படத்தை இறக்கிவிட்டால்? அதுதான் சன் பிக்சர்சின் யோசனையாக இருந்தது.

அவ்வளவு பெரிய நிறுவனம் இவர்களுக்கு அஞ்சுமா? வேறு வழியில்லை. அஞ்சிதான் ஆகவேண்டும். தியேட்டர் ஏரியாவை பொருத்தவரை இவர்கள் வைத்ததுதான் சட்டம். 2ம் தேதி, அல்லது 6ம் தேதி ரிலீசாகிறதா சர்கார் என்பது இப்போதைய பிரச்னையல்ல. ஆனால், இன்றைய நிலையில் சர்கார் படம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை விஜயும், சன்பிக்சர்ஸும் எப்படி சமாளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே ’சர்கார்’ அமைப்பதின் சாமர்த்தியம் வெளிப்படும்.!

இப்போது மீண்டும் முதல் பாராவை படித்து பாருங்கள்... இந்தப்பிரச்னைக்கு ஆரம்பம் யாரென்று புரியும்..!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close