சாலை விபத்துக்களை தவிர்க்க 'உயிர்' அமைப்பு: முதல்வர் தொடங்கி வைத்தார்

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2018 03:09 pm
cm-inaugurates-new-organisation

சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க, 'உயிர்' எனும் அமைப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். 

நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சாலை விபத்துக்களினால் உண்டாகும் உயிரிழப்பு, உடல் ஊனம் ஆகியவற்றை தவிர்க்க  'உயிர்' எனும் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த அமைப்பின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி அமைப்பை தொடங்கி வைத்தார். இந்த அமைப்பின் தலைவர் சஞ்ஜெய் ஜெயவர்த்தன வேலு , நிர்வாக அறங்காவலர் கங்கா மருத்துவமனை டாக்டர். ராஜசேகரன், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், பண்ணாரி கல்வி குழுமம் டாக்டர். பாலசுப்பிரமணியம் மற்றும் டாக்டர். சண்முகநாதன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


தொடக்க விழாவில் உயிர் அமைப்பின் உயிர் காக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு அதிகாரிகளுடன் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன், போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் ஆன்மீக குருக்கள் பலர் கலந்துகொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close