தமிழிசைக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’விருது 

  ஐஸ்வர்யா   | Last Modified : 27 Oct, 2018 05:24 pm
tamilisai-soundararajan-got-a-new-award

பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருதை வழங்கவுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் அறிவித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவரான குமரி அனந்தனின் மகளும், மருத்துவருமான தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜகவின் மாநில பொது தலைவராக இருந்து வருகிறார்.  மாநில பொதுச் செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், தமிழக பாஜக கட்சியின் தலைவராக இருந்து வரும் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக அரசியலில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். இதை கெளரவப்படுத்தும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் என்ற நிறுவன  ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருதை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

Newstm. in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close