கூவத்தூரில் ஒரு ரகசியமில்லை! பல ரகசியங்கள் உள்ளன- கருணாஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 27 Oct, 2018 05:47 pm
karunas-mla-press-meet

கூவத்தூர் ரகசியம் ஒன்று மட்டும் இல்லை. பல ரகசியங்கள் உள்ளதன என எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

காளையார்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “18 சட்டமன்ற உறுப்பினர்களும் மேல் முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்தது சரிதான். எனக்கு போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் சபாநாயர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவேன்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து மக்களை சந்தித்து நியாயம் கேட்டதற்காக இந்த அரசு என் மீது தொடர்ந்து பழி வாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என் மக்களுக்காக நான் எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்வேன். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் மேல் முறையீடாக இருந்தாலும் சரி, தேர்தலை சந்திப்பதாக இருந்தாலும் சரி எனக்கு சம்மதமே. கூவத்தூர் ரகசியம் ஒன்று மட்டும் இல்லை. பல ரகசியங்கள் உள்ளன” எனக் கூறியுள்ளார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close