’சர்கார்’ விவகாரம்... ஏ.ஆர்.முருகதாஸை கைகழுவிய விஜய்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Oct, 2018 12:58 pm
sarkar-issue-vijay-handed-over-a-r-murugadoss

சர்க்கார், செங்கோல் இரண்டு கதைகளும் ஒரே மாதிரியானது என்று கே.பாக்யராஜ் கொடுத்த கடிதத்தை, வருண் ராஜேந்திரன் ஏன் கடைசி நேரத்தில் வெளியிட வேண்டும் என்பதுதான் அக்டோபர் 27 வரைக்கும் கோடம்பாக்கத்தின் ரியாக்‌ஷன்.

இது ‘ஒருவேளை உண்மையாகவே பணத்துக்காக வருண் ராஜேந்திரன் பொய் புகார் சொல்றாரோ’ என ஃபெப்சி யூனியனில் அங்கமாக இருக்கும் மற்ற சங்கங்களை யோசிக்க வைத்தது. ஆனால், அக்டோபர் 27ஆம் தேதி ஏ.ஆர்.முருகதாஸ் ஓர் இணையதள நிறுவனத்துக்குக் கொடுத்த பேட்டியில் மொத்தமாக எல்லாமே மாறி விட்டது. 

இந்த விஷயத்தில் விஜயின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள சினிமாத்துறையினர் காத்திருந்தனர். ஆனால், முருகதாஸ் கொடுத்த பேட்டியில் ‘நான் என் பிரச்சினைக்காக மத்தவங்களை தர்ம சங்கடப்படுத்த விரும்பல. என் கதையை சங்கம் படிச்சதா இல்லையா?’ என்பது தெரியவில்லை. பாக்யராஜ் இயக்கிய சின்ன வீடு படமும், கலைமணி இயக்கிய கோபுரங்கள் சாய்வதில்லை படமும் ஒரே மாதிரி கதைதான். அதுக்காக பாக்யராஜ் காப்பி அடிச்சார்னு சொல்ல முடியுமா?’ எனக்கேட்டிருக்கிறார். இப்படி கேட்டது முருகதாஸின் கேட்டது வரம்பு மீறிய செயல் என கோடம்பாக்கம் கொந்தளிக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றை திரும்பிப் பார்த்தால், முருகதாஸ் அளவுக்கு விமர்சனங்களை சந்தித்த இயக்குநர் இருக்க முடியாது. ஆனால், அந்த விமர்சனங்களுக்கு தொடர்பில்லாதது போல் அமைதி காக்கும் வகையில் இந்தப் படத்தில் முருகதாஸ் இருக்க முடியாமல் வெளியே வந்து பேசியிருப்பதற்குக் காரணமே விஜய் ரியாக்‌ஷன் தான்.

முருகதாஸ் கேட்கும் கேள்விகள் எல்லாமே நியாயமானதாக இருந்தாலும், அந்தக் கேள்விகளை பாக்யராஜ் வீட்டில் அழைத்துப் பேசியபோது முன்வைக்காமல் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டு இப்போது ஏன் விளக்கம் கேட்கிறார் என்ற கேள்வி எழுகிறது. ‘ஒரே மாதிரியான எண்ண ஓட்டம் இருக்குறது வாஸ்தவம்தான். ஆனால், தன் ஓட்டைத் திருடிப் போட்டதும் கோர்ட்டுக்குப் போகாமல், அரசியல்வாதியாக மாறுவது; ‘ஒரு விரல் புரட்சி’ என்ற பெயரில் இளைஞர்களைத் திரட்டுவது; அரசியல்வாதியின் பின்னணி ஒரே மாதிரியாக இருப்பது ஆகியவை எல்லாமும் ஒரே எண்ண ஓட்டத்தில் வருமா எனக் கேட்ட கேள்விக்குப் பதிலில்லை. ‘உங்களுக்கு சிவாஜி வாக்கினை திருடியது ஒரு தாக்கமா இருந்ததுன்னு சொல்றீங்க. அவர் கோர்ட்டுக்கா போனார்’ என்று பாக்யராஜ் கேட்டதற்கும் பதிலில்லை. விஜய்யும் இதில் தலையிட மாட்டேன் எனச் சொன்ன பிறகுதான் முருகதாஸ் வெளியில் வந்திருக்கிறார்.

எழுத்தாளர் சங்கத்தை விட்டு விஷயம் வெளியே போகப்போகிறது என்று தெரிந்ததுமே, பாக்யராஜ், விஜய்யிடம் பேசியிருக்கிறார். நடந்தது என்ன என்பதை பாக்யராஜ் விளக்கியதும் ‘உங்க பேட்டியைப் பார்த்துதான் இந்தப் பிரச்சினை எனக்குத் தெரிய வந்தது. இதில் நான் மன வருத்தப்பட ஒன்றுமில்லை. இந்தப் படத்தில் நடித்ததோடு என் வேலை முடிந்துவிட்டது. கதை பிரச்சினை என்பது இயக்குநர் எதிர்கொள்ள வேண்டியது. அதனால், நீங்கள் உங்கள் நடைமுறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத் தவறாமல் செய்துவிடுங்கள். எனக்காக உங்கள் பதவியின் கடமையைக் கைகழுவ வேண்டாம்’ என்று விஜய் கூறியிருக்கிறார். இதன்பிறகு தான் பாக்யராஜ் தனது மனசாட்சிப்படி கடிதத்தை எழுதியிருக்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close