ரஜினி எடுத்த அதிரடி முடிவு... அரசியல் கட்சிகள் அதிர்ச்சி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Oct, 2018 04:20 pm
action-by-rajini-the-political-parties-are-shocked

ரஜினிக்கும் , திமுகவுக்கும் இடையே நடக்கும் யுத்தம் முரசொலி விமர்சனம் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்தச் சூழலை பயன்படுத்தி அதிமுகவும், ரஜினியும் உடன் இருந்தால் தேர்தலை எதிர்கொள்ள சரியாக இருக்கும் என கணக்குப் போடுகிறது பாஜக. இதற்காக ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் தொடர்ந்து ரஜினியோடு பேச பல முயற்சிகளை செய்துவருகிறது பாஜக. ரஜினியைத் தொடர்புகொண்டு பேசும் குருமூர்த்தி அவரை சந்திக்க பத்து முறை அப்பாயின்மெண்ட் கேட்டால், ஒருமுறைதான் ரஜினி வரச் சொல்கிறாராம். பல நேரங்களில், தவிர்த்தே வருகிறாராம்.

 

தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் இதை சொல்லியிருக்கிறார் ரஜினி. ‘எப்படியாவது என்னை அவங்க பக்கம் இழுத்துப் போடணும்னு கூப்பிட்டுகிட்டே இருக்காங்க. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. கூட்டணியெல்லாம் நான் யோசிக்கக்கூட இல்லை. தனிக்கட்சி அவ்வளவுதான். ஏ.சி.சண்முகம்கூட என்கிட்ட சொன்னாரு. ஆனால், கூட்டணி என பேசினால் கட்சியே வேண்டாம்னு சொல்லிட்டேன். இன்னொரு நண்பர் வந்து, ‘திருமாவளவன் கூட்டணிக்காக கேட்கிறாரு பேசலாமா?’ன்னு கேட்டாரு. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். வாசனும்கூட என்கிட்ட கேட்டாரு. நான் சிரிச்சுட்டே அவரையும் தவிர்த்துட்டேன். வேணும்னா அவங்க கட்சியை நம்ம கட்சியில மெர்ஜ் பண்ணிடட்டும்.

தனித்துதான் போட்டி என்பதில் நான் உறுதியாக இருக்கேன். எப்படியும் நாடாளுமன்ற தேர்தலில் நாம போட்டியிடப் போறது இல்லை. சட்டமன்றம்தான் நம்ம டார்கெட். 2021க்குள்ள அடிமட்டத்தை நாம ஸ்ட்ராங் பண்ணணும். அதுவரைக்கும் யாரு வந்து கூட்டணி பற்றி பேசினாலுமே முடியாதுன்னுதான் சொல்லிட்டே இருக்கேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில், அமைச்சர் செங்கோட்டையனும் ஒருமுறை ரஜினியை சந்தித்துப் பேசியிருக்கிறார். ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் மூலமாக இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. அரசியல் நிலவரங்களைப் பற்றி இருவரும் பேசியிருக்கிறார்கள். செங்கோட்டையன் செயல்பாடுகளைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லி அவரைப் பாராட்டியிருக்கிறார் ரஜினி. ‘நீங்களும் எங்களோடு இருந்தால் நாங்களும் சந்தோஷப்படுவோம்’ என செங்கோட்டையன் கேட்டாராம். அதற்கு ரஜினி சிரித்தே மழுப்பி அனுப்பிவிட்டார். இந்த சந்திப்பு பற்றி செங்கோட்டையனே முதல்வர் எடப்பாடியிடம் சொல்லியும் விட்டாராம். என்ன சொன்னாரு ரஜினி என எடப்பாடியும் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டாராம்.

அதுமட்டுமல்ல, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவும் ரஜினியை சந்தித்து சில ஐடியாக்களை சொல்லியிருக்கிறார். ‘நாம சேர்ந்து பண்ணுவோம்’ என ராம்மோகன் சொன்னாராம். அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டாலும் பதில் எதுவும் சொல்லாமல் அவரையும் அனுப்பியிருக்கிறார் ரஜினி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close