அமைதி காக்கும் மு.க.ஸ்டாலின்... அதிரடிக்குத் தயாராகும் மு.க.அழகிரி..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Oct, 2018 08:13 pm
m-k-stalin-s-peace-keeping-m-k-azhagiri-ready-for-action

தன்னை தி.மு.க-வில் இணைக்கக்கோரி பல வகைகளிலும் முட்டி மோதிப்பார்த்த  மு.க.அழகிரி, அடுத்து ஸ்டாலினுக்கு எதிராக மாபெரும் திட்டத்துடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது. 

கடந்த 12-ம் தேதி திண்டுக்கல்லில் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டத்தை நடத்தினார் அழகிரி. சென்னையில் அவர் நடத்திய பேரணியைப் போலவே அதுவும் பிசுபிசுத்துப்போனது. இதனால் நொந்து போன அவர், ’’தி.மு.க பிள்ளை பிடிக்கிற வேலையை விட்டுவிட்டு கட்சி வேலையை மட்டும் செய்ய வேண்டும். தி.மு.க.,வை மாற்ற வேண்டிய நேரம் வரும், அதுவரை நாம் காத்திருப்போம். தேர்தல் வரும்போது நம்முடைய திறமையையும், உழைப்பையும் எப்படிக் காட்டுவது என்று அப்போது நான் சொல்கிறேன்.  அதுவரை அமைதியாக நம்முடைய பணியைச் செய்துகொண்டு இருப்போம்’ என திண்டுக்கல் நிகழ்வில் ஆக்ரகோஷமாக பேசி விட்டுப்போனார். 

நிகழ்ச்சி முடிந்ததும் தனது ஆதரவாளர்களை தனியாக அழைத்துப்பேசிய அவர், 'இன்னும், ரெண்டு மாசம் வரை அமைதியா இருங்க... அப்புறமா எந்த முடிவும் எடுக்கலாம்' என சொல்லி இருக்கிறார்.  ஏன் இந்த இடைவெளி?  ‘இந்த இரண்டு மாதத்தில் குடும்ப உறுப்பினர்கள் சிலர், பஞ்சாயத்து பேசி, தனக்கு சாதகமான முடிவு எடுப்பார்கள் என நம்பினார்.

இதற்கு இடையில், அழகிரியை, தி.மு.க.,வில் சேர்க்க வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். அந்த கையெழுத்து படிவங்களை எல்லாம், இன்னும் ஓரிரு நாட்களில் , அறிவாலயத்தில் ஒப்படைக்க, அழகிரி உத்தரவு போட்டிருக்கிறார். ஆனாலும், மு.க.ஸ்டாலின் தரப்பு அதனையும் பொருட்படுத்தாது என்பதை மு.க.அழகிரி உணர்ந்தே வைத்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்த அதிரடிக்கு அவர் தயாராகி விட்டார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.  

 ’’தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம்ன் அண்ணனுக்கு இல்லை. ரஜினி ஆரம்பிக்கும் கட்சி, அல்லது பாஜகவில் அவர் இணைந்து மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுப்பார்’ என்கிறார்கள் மதுரை வட்டார மு.க.அழகிரி விசுவாசிகள்!

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close