ரஜினியிடம் சரணடைந்த மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 28 Oct, 2018 08:53 pm
m-k-stalin-surrenders-to-rajini

’ஹூ இஸ்தி பளாக் ஷிப்... மே.. மே..மே..’ என ரஜினி பற்றி விமர்சனம் தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ  நாளேடான முரசொலியில் வெளியானது.  அதற்கு அந்த நாளேடின் ஆசிரியர் வருத்தமும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது முரசொலி வரலாற்றில் நிகழ்ந்திராத ஒன்று என தி.மு.கவை சேர்ந்தவர்களே ஆச்சர்யப்படுகின்றனர். 

இந்த நிகழ்வுக்கு பின்னணியில், பல்வேறு காரணங்கள் கூரப்படுகின்றன.  கருணாநிதி உயிரோடு இருந்த சமயத்தில், ரஜினி கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். அப்போதே, ரஜினி வருவதை முரசொலி செல்வம் விரும்பவில்லை. ‘அவரு கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொல்லிட்டாரு. அப்படி இருக்கும்போது எதுக்கு அவருக்கு அப்பாயின்மெண்ட் கொடுக்குறீங்க? அவரு தலைவரோட உட்கார்ந்து பேசிட்டு போய், அவர் செல்வாக்கை வளர்த்துக்கப் பார்க்கிறாரு.’ என்று சொன்னாராம். அதற்கு ஸ்டாலினோ, ‘கேட்டாரு... வரச் சொல்லிட்டேன். இப்போ வர வேண்டாம்னு சொன்னால் நல்லா இருக்காது’ என சொல்லிவிட்டாராம். ஆனால், ரஜினி வந்த போதுகூட, ஸ்டாலின் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் அப்போது இல்லை. கருணாநிதி மறைந்த சமயத்திலும் கோபாலபுரத்துக்கு சிரமப்பட்டுதான் வந்து போனார் ரஜினி.

இனி ரஜினி தனிக்கட்சியாக இருந்தாலும் சரி... அல்லது யாரோடு கூட்டணி வைத்தாலும் சரி... அது திமுகவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என ஸ்டாலினும் நினைக்க ஆரம்பித்து விட்டார். அதனால்தான் ரஜினிக்கு திமுகவில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கிவிட்டது.
ஆனாலும், ரஜினியுடன், கருணாநிதி காலத்தில் இருந்தே நட்பு பாராட்டி வந்தவர் மு.க.அழகிரி. இதை மனதில் வைத்தே ரஜினிக்கு எதிராக அவரைப் பற்றிய விமர்சனக் கட்டுரை முரசொலியில் பிரதி பலித்தது. இதனைக் கண்டதும் ரஜினி மிகவும் அப்செட் ஆகி விட்டார்.

இதனை தாமதமாக அறிந்த மு.க.ஸ்டாலின் தனது மருமகன் சபரீசன் மூலம் ரஜினியை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால், ரஜினி கடுங்கோபத்தில் அந்த சமாதானத்தை நிராகரித்தார். ஏற்கெனவே மு.க.அழகிரி ரஜினி கட்சியில் இணைவதற்கு முயற்சி எடுத்து வரும் நிலையில், அதற்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்தி கொடுத்து விடக்கூடாது என்கிற எண்ணத்திலேயே மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலில் பேரிலேயே முரசொலி ஆசிரியர் குழு மூலம் மன்னிப்பு கோரும் வகையில் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

ரஜினி மீது அதிருப்தி இருந்தாலும் அதனை இப்போதைக்கு வெளிப்படுத்தினால், தி.மு.க-விற்கு பாதகமாகும் என்பதை உணர்ந்தே  தற்போதைக்கு ரஜினியை எதிர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்’ என தி.மு.க நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்’’ என்கிறார்கள் உடன் பிறப்புகள்.   

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close