ஐடி ரெய்டு நடைபெற்று வரும் விவி மினரல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான வங்கி கணக்குகள் இன்று வருமானவரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் திசையன்விளையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விவி மினரல்ஸ் நிறுவனம் தமிழகம் உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் கடற்கரையில் உள்ள கனிமங்கள் நிறைந்த மணலை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள இந்நிறுவனம், இந்நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜனின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 25ம் தேதி முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து 5வது நாளாக நடைபெறும் இந்த வரும்வரித்துறை சோதனையில், இன்று அதிகாரிகள் விவி மினரல்ஸ் நிறுவனத்தின் வாங்கிக்கணக்குகளை முடக்கியுள்ளனர்.
newstm.in