முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை!

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2018 04:32 pm
stalin-pays-his-tribute-to-muthuramalinga-devar

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மூத்த தலைவர்களும் மரியாதை செலுத்தினர். 

மேலும் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்கத்தில் நேதாஜி; தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ என தலைவர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட, பசும்பொன் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினேன்! அவரது வழியில், மதமாச்சர்யம் - சாதி வேறுபாடு அற்ற சமூகத்தை உருவாக்க சபதம் ஏற்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close