பா.ஜ.க நிர்வாகியின் சம்பந்தியாகும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Oct, 2018 06:48 pm

the-cinema-financier-is-with-the-bjp-executive-family-marriage

பாஜக மாநிலத் துணைத் தலைவராகவும் இருக்கும் நயினார் நாகேந்திரனின் மகனுக்கும், அன்புச்செழியன் மகளுக்கும் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மதுரையை பூர்வீகமாக கொண்டவர் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் பெரும் சினிமா பைனான்சியரான இவரால் 2003ம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினத்தின் சகோதரரும், தயாரிப்பாளருமான ஜி.வி எனப்படும் ஜி.வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் உறவினர்  துணைத் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு அன்புச்செழியனின் மிரட்டலே காரணம் எனக் கூறப்படுகிறது. 

பலருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை பைனான்ஸ் செய்து வரும் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் மதுரை செல்லுார் பகுதியில் இருக்கும் பிரபலமான தியேட்டரை விலைக்கு வாங்கி இருக்கிறார். அந்தத் தியேட்டர் கைமாறி, அவரது மகள் பெயரில் இயங்க இருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.கவில் முன்னால் அமைச்சராகவும், தற்போதைய பாஜக மாநிலத் துணைத் தலைவராகவும் இருக்கும் நயினார் நாகேந்திரனின் மகனுக்கும், அன்புச்செழியன் மகளுக்கும் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்காகவே தனது மகள் பெயரில் தியேட்டரை வாங்கிப்போட்டிருக்கிறார் அன்புச்செழியன்!

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.