18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் எடப்பாடி ஆட்சியை உண்மையில் காப்பாற்றியவர் யார் தெரியுமா..? பரவச பின்னணி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Oct, 2018 08:10 pm

a-cubic-twine-that-saved-the-rule-of-edappadi-govt-epic-background

சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட விஷேச கயிற்றால் தனக்கு சாதகமாக அனைத்தும் நடைபெறுவதாக உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

பொதுவாக அ.தி.மு.க., கட்சியை சேர்ந்தவர்கள், ஜாதகம், பூஜை, கோயில் என அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் ஓ.பி.எஸ் உள்குத்து, வரிமான வரித்துறை சோதனைகள்,  நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு, 18 எம்.எல்.ஏக்கள் தகுதீக்க தீர்ப்பு என சமீபகாலமாக மிகவும் நெருக்கடிகளை சந்தித்து வந்தார் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி. 

இதனால், பூஜை, ஜோசியம் என நாட ஆரம்பித்தார். தனது குடும்ப ஜோதிடரிடம்  ஆலோசனை செய்தார்.அதன்படி எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட விசேஷ கயிறு தயாரிக்கப்பட்டது. அதை தற்போது கையில்  கட்டிக்கொண்டே பழனிசாமி வெளியில் வருகிறார். இதற்கு கைமேல் பலன் கிட்டயுள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.  அந்தக் கயிற்றை கட்டிய ஓரிரு நாட்களில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அவரது ஆட்சிக்கு இருந்து வந்த ஆபத்து நீங்கியது.

அடுத்து, நெடுஞ்சாலைத்துறை முறைகேடு தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இப்படி அடுத்தடுத்து சோதனைகள் அகன்றுவருதால், இனி எதையும் எதிர்க்கொள்ளலாம் என்கிற மனமாற்றத்திற்கு வந்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

 

சமீபத்தில் நடைபெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த உதவியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.