உள்ளாட்சி தேர்தல் அதி விரைவில் நடப்பது தமிழகத்திற்கு நல்லது: பொன்.ராதாகிருஷ்ணன்

  சுஜாதா   | Last Modified : 31 Oct, 2018 05:43 am

it-is-good-for-tamil-nadu-to-conduct-the-local-elections-very-soon-pon-radhakrishnan

உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க எதிர்பார்ப்போடு உள்ளது. உள்ளாட்சி தேர்தல் அதி விரைவில் நடப்பது தமிழகத்திற்கு நல்லது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நடைபெற்ற ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்  நிருபர்களிடம் கூறியதாவது, 

பிரதமர் மோடியின் அற்புதமான திட்டமாக தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். தூய்மையாக இருந்தால்தான் அயல்நாட்டை சேர்ந்தவர்கள் நம் நாட்டில் வர்த்தகம் செய்ய வருவார்கள். இந்த திட்டத்தில் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என சொல்லும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு, தமிழ்நாட்டை பற்றியும், மத்திய அரசை பற்றியும் தெரியவில்லை. அவர் தெரிந்து கொள்வது நல்லது. தமிழக அரசாங்கத்தை பற்றியும் மத்திய அரசாங்கத்தை பற்றியும் அவர் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்

தேர்தலை சந்திப்பது அரசியல் கட்சியின் முக்கியமான பணிகளில் ஒன்று. அப்படிப்பட்ட தேர்தலை சந்திப்பதற்கு பா.ஜனதா தயாராக உள்ளது. 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் காரணமாக வரக்கூடிய தேர்தலில், மேல் முறையீடு மற்றும் அதை சார்ந்து வரக்கூடிய நிலைகளை பொறுத்து தமிழக பா.ஜனதா முடிவு செய்யும். ஆனால் பல கட்சிகள் தேர்தலுக்கு அச்சப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருந்தால் மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக சொல்ல வசதியாக இருக்கும். அந்த மக்கள் பிரதிநிதிகள், மக்கள் பிரச்சினைகளை தீர்க்க செயல்படுவார்கள். இது கொஞ்ச நாட்களாக நடைபெறாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் பரவிக் கொண்டிருப்பது மனதுக்கு சுமையைத் தரக்கூடிய விஷயமாகத்தான் இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க எதிர்பார்ப்போடு உள்ளது. உள்ளாட்சி தேர்தல் அதி விரைவில் நடப்பது தமிழகத்திற்கு நல்லது.

கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் குக்கிராமங்களில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தக் கூடிய பிரதமர் மோடியின் லட்சத்து ஐம்பதாயிரம் நலவாழ்வு மையங்கள் தொடங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.

பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி? வந்தால் என்ன சிகிச்சை செய்யவேண்டும் என்பது குறித்து விளக்கி வருகிறார்கள். ஆனால் அது போதாது. இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.