’எடப்பாடியின் வாயை அடைத்த ஆம்னி உரிமையாளர்கள்...’ ராமதாஸ் பகீர்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 31 Oct, 2018 11:39 am

edappadi-mouthpiece-of-the-robbery-money-ramadoss-says

தீபாவளியை பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதற்கு பாமக நிறுவனர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் 20% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு 20,567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்து இருந்தார். இதற்கான டிக்கெட் முன்பதிவு கவுண்டர் நாளை முதல் தொடங்குகிறது.

அரசு பேருந்துகளின் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக, பலரின் விருப்பம் ஆம்னி பேருந்துகளாக உள்ளது. அதேசமயம், சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், பண்டிகைக் காலங்களை பயன்படுத்தி டிக்கெட் விலையை ஏற்றி காசு பார்ப்பதுண்டு. இதுபோன்று விலை அதிகமாக விற்கும் ஆம்னி உரிமையாளர்களை அரசு கண்டு கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு. 

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் 20% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், 20 சதவிகிதம் என்பது கந்துடைப்பு. இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், ‘’இந்தக் கட்டண உயர்வு அறிவிப்பால், சாமானிய மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த கொள்ளைக்கு எதிராக தமிழக முதலமைச்சரும், போக்குவரத்து அமைச்சரும் வாயைத் திறக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்களின் வாய்கள் கட்டணக் கொள்ளையில் கிடைத்த லாபத்தின் ஒரு பங்கால் அடைக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்துள்ளார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.