ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 12:41 pm
madras-hc-interim-banned-for-online-medicine-sale

தமிழகத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தது. அதில், "ஆன்லைனில் மருந்து விற்பனை அதிகரித்து வருகிறது. அதுவும்  போலியான, காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இது ஒரு அங்கீகரிக்கப்படாத மருந்து விற்பனையாகவே இருக்கிறது. எதன் அடிப்படையில் ஆன்லைன் மருந்து விற்பனையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரியவில்லை. இதனால் உண்மையான விற்பனையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கின் இன்றைய விசாரணையில்  ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அதுவரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close