ஆட்சியை கவிழ்க்கும் 7எம்.எல்.ஏக்கள்... மு.க.ஸ்டாலினுடன் பரபரக்கும் டி.டி.வி.தினகரன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 31 Oct, 2018 12:47 pm

7-mlas-to-overthrow-govt-t-t-v-dhhinakaran-with-the-m-k-stalin

டி.டி.வி.தினகரனும், மு.க.ஸ்டாலினும் ஆட்சி கவிழ்ப்பு என்கிற ஒரே புள்ளியில் மையம் கொண்டுள்ளனர். அதற்காக இருவரும், தத்தம் கட்சியினருடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

18 எம்.எல்.ஏக்கள் வழ்க்கின் தீர்ப்பு எடப்பாடி அரசுக்கு சாதகமாக வரும் என அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவேயில்லை. தீர்ப்பு வந்துவுடன் ஆட்சியை கவிழ்கும் அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் எடப்பாடி தரப்பை வீழ்த்த வேண்டும் என்பதே தினகரனின் முதல் குறிக்கோள். அ.தி.மு.க-வை மீட்க வேண்டுமானால் எடப்பாடி அணி பலவீனமடைய வேண்டும். அவர்கள் ஆட்சியில் நீடித்தால் இன்னும் வலுப்பெற்று விடுவார்கள்.

அது தமக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஆட்சியில் இருக்கும்வரை தான் அவர்களுக்கு செல்வாக்கு. வீழ்த்தி விட்டால், அ.தி.மு.க அதிரடியாக தம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். இப்போதைய ஆட்சிக் கவிழ்ப்பு தி.மு.கவுக்கு சாதகமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், எடப்பாடி ஆட்சி களைக்கப்பட வேண்டும் என முட்டி மோதி வருகிறது தினகரன் அணி. இதற்காக எடப்பாடி அணியில் இருக்கும் 7 எம்.எல்.ஏக்களை எப்படியாவது கழற்றிக் கொண்டு வந்துவிட வேண்டும் என தினகரன் மட்டுமல்ல, ஸ்டாலினும் காய் நகர்த்தி வருகிறார்.  

234 தொகுதிகளில், ஏற்கெனவே ஏ.கே.போஸ் மறைவால் திருப்பரங்குன்றமும், கருணாநிதி மறைவால் திருவாரூரும் காலியாக உள்ளன. இப்போது 18 தொகுதிகள். மொத்தம் 20. எனவே, இப்போது சட்டமன்றத்தின் பலம் 214. இதில் பெரும்பான்மைக்கு 108 எம்.எல்.ஏ-க்கள் பலம் தேவை. ‘எங்கள் ஆட்சிக்கு 109 எம்.எல்.ஏ-க்கள் பலம் உள்ளது’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் 97 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். தினகரன் சுயேச்சை. அவர் பக்கம் இப்போது அ.தி.மு.க-வைச் சேர்ந்த அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் தவிர, இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயித்த கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோரையும் தினகரனின் கணக்கில்தான் சேர்க்கிறது ஆளும்கட்சி. எனவே, தினகரன் கணக்கு ஏழு. தி.மு.க கூட்டணியினரையும் இதையும் கூட்டினால், ஆளும்தரப்புக்கு எதிரானவர்களின் பலம் 104. சபாநாயகரைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஆளும்கட்சியின் பலம் 109. ஆகவே எடப்பாடி அணியில் இருக்கும் 7 எம்.எல்.ஏக்களை தங்கள் வசப்படுத்த தினகரனும், ஸ்டாலினும் தனித்தனியாக காய் நகர்த்தி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்தே 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்கிற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்கிற முடிவை தினகரன் தரப்பு அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.