ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 03:33 pm
sc-orders-tn-police-to-take-action-against-obscene-programs

கோவில் திருவிழாக்களில் ஆபாசமாக ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தமிழக கோவில் விழாக்களில் முக்கியமாக இடம் பெறுபவை ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் தான். ஆனால் இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் தற்போது ஆபாசம் நிறைந்து காணப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையையடுத்து, நீதிபதிகள், கோவில் திருவிழாக்களில் ஆபாசமாக ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

மேலும், "கோவில் விழாக்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை காவல்துறையினர் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.  தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்ளுக்கும், இது தொடர்பாக மாநில டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். நிகழ்ச்சியின் வீடியோ பதிவில் ஆபாசம் இருந்தால் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்கலாம்" என கூறி வழக்கு நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close