இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுமா ? கே.சி. பழனிசாமி கேள்வி

  ஐஸ்வர்யா   | Last Modified : 31 Oct, 2018 07:29 pm
kc-palanisamy-press-meet

இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுமா என கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக சட்டவிதிகளில் மேற்கொண்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரிய கே.சி.பழனிச்சாமியின் மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

அதிமுகவின் சட்டவிதிகளில் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் மாற்றங்களை கொண்டு வந்தனர். இதை ரத்து செய்து, கட்சியில் இருந்து நீக்கியவர்கள் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து சட்டவிதி திருத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட தேவையில்லை என விளக்கம் அளித்தது. இதையடுத்து கே.சி.பழனிச்சாமி மனுவை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது. 

இந்நிலையில் கோவையில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே. சி. பழனிசாமி, “தேர்தல் ஆணைய உத்தரவுப்படி பார்த்தால், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கையெழுத்திற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் தேர்தல் ஆணையம் உத்தரவு தெளிவற்று உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கையெழுத்துக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க கூடாது என கோரிக்கை மனுவை முன் வைப்பேன். இரட்டை இலை சின்னம் ஒதுக்க அதிமுக ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையம் அழுத்தம், உந்துதல் பேரில் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவது போல் உள்ளது" என கூறினார்.

 

Newstm.in  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close