பொன்.ராதாகிருஷ்ணன் தான், தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: தம்பி துரை

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 11:36 am
thambi-durai-press-meet

என்னை சுய பரிசோதனை செய்துகொள்ளச் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன், தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன. இந்த 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும்" என்றார். 

மேலும், எம்.பி தம்பிதுரை தன்னை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவிக்கையில், "என்னை சுய பரிசோதனை செய்துகொள்ள சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன் தான், தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், " தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.18,000 கோடி நிதியை வழங்க மத்திய அரசு தாமதித்து வருகிறது. எம்.பிக்களுக்கு கிராமங்களை தத்தெடுப்பதற்கு வழங்க வேண்டிய நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close