டெல்லியில் இன்று ராகுலை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு!

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 12:03 pm
chandrababu-naidu-to-meet-rahul-gandhi-in-delhi-today

ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசுகிறார். 

தெலுங்கானாவில் வருகிற டிசம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற நவம்பர் 12ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க அல்லாத கூட்டணியை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். 

இந்த சூழ்நிலையில் தான், அவர் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி செல்கிறார். டெல்லியில், காங்கிரஸ் தலைவ ராகுல் காந்தியின் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பானது நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, சரத் பவார், பரூக் அப்துல்லா, வீரப்ப மொய்லி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close