ஜெயலலிதாவை நான் பார்த்தேன்: முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 04:09 pm
governor-vidyasagar-rao-replied-about-jayalalitha

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தான் ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அப்போது அவர் மயக்கமுற்ற நிலையில் இருந்தார் எனவும் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். 

இதையடுத்து, அவரது மரணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதி ஆறுமுகசாமி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் தான், ஜெயலலிதாவை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் மருத்துவமனையில் சந்தித்தாரா? என்பது குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பி இருந்தது.

இதற்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதிலளித்துள்ளார். அதில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தான் ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அப்போது அவர் மயக்கமுற்ற நிலையில் இருந்தார் எனவும் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகலுடன் ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கும் ஆளுநர் தரப்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close