டி.டி.வி அணியினரை வேட்பாளராக்க எடப்பாடி முடிவு... தி.மு.க.வை சமாளிக்க அதிரடி வியூகம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Nov, 2018 04:38 pm
t-t-v-team-will-be-decided-to-contest-action-to-deal-with-dmk

இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என்கிற நெருக்கடியில் இருக்கும் அ.தி.மு.க பல வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக தினகரன் அணியில் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களையும் தங்களது அணிக்கு இழுத்துவர முயற்சிகளைத் தொடங்கி உள்ளது. 

இடைத்தேர்தல் குறித்து அவ்வப்போது அ.தி.மு.க-வில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ’18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பில் நீதிமன்றம் சொன்னது நமக்கு சாதகமாக இருந்தாலும் அதை மட்டுமே வைத்துக்கொண்டு நாம சந்தோஷப்பட்டுவிட முடியாது. இடைத் தேர்தல் வந்தால் அதை எதிர்கொண்டு வெற்றிபெற எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இந்த 18 பேரோட தொகுதியிலும் எந்த வேலைகளுமே நடக்கவில்லை என்ற கோபம் மக்களுக்கு இருக்கும். அந்தக் கோபம், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீதுதான் திரும்பும். நிச்சயமாக அவங்க கட்சியில் 18 தொகுதிக்கும் வேட்பாளர்கள் அவர்களாகவேதான் இருப்பார்கள். 

நாம அந்த 18 தொகுதிக்கும் யாரை நிறுத்துவது என்பதை முடிவு செய்யணும். அப்படி நாம நிறுத்தும் நபர் கட்சிக்காரர்களிடமும்,  பொதுமக்களிடமும் அதிருப்தி இல்லாத ஆளா இருக்கணும். அப்படி ஒருவரை நிறுத்தினால்தான் நாம தைரியமாகப் போய் ஓட்டுக் கேட்க முடியும். தி.மு.கவையும் சமாளிக்க முடியும். வேட்பு மனு தாக்கல் செய்து அதுல இருந்து ஒருத்தரை செலெக்ட் பண்றதெல்லாம் இருக்கட்டும். ஆனால், அதுக்கு முன்னாடியே  20 தொகுதியிலும் யாரை நிறுத்தினால் சரியாக இருக்கும் என்பதை நாமே விசாரித்து தெரிந்து வைத்திருக்கணும். அப்போதான் சரியான வேட்பாளரை நம்மால் அடையாளம் காண முடியும்.

500 பேரு ஒரு தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தாலும், நாலு பேரை மட்டும் அம்மா கூப்பிடுவாங்க. அந்த நாலு பேரு யாரு என்பதை முதல்லயே ரிப்போர்ட் அடிப்படையில் முடிவு பண்ணியிருப்பாங்க. அப்படி நாமும் ஒரு தொகுதிக்கு 4 பேரை முன் கூட்டியே முடிவு பண்ணி வெச்சிருக்கணும். அதேபோல நாம முன்னாடியே பேசி முடிவு செய்தது போல ஒரு தொகுதிக்கு நான்கு பொறுப்பாளர் என்பதை உடனடியாகவே அறிவிச்சுடணும். அவர்களை இன்றிலிருந்தே களத்தில் இறங்கி வேலை பார்க்கச் சொல்லணும். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தொகுதியைப் பற்றிய அத்தனை விவரங்களும் அந்த 4 பொறுப்பாளருக்கும் தெரிஞ்சிருக்கணும். அப்போதான் இப்போ இருக்கும் சூழ்நிலையை சமாளிக்க முடியும்’ என எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். 

அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி, “20 தொகுதியிலும் நமக்குப் போட்டி என்பது தி.மு.க-வாகத்தான் இருக்க வேண்டும். எந்த இடத்திலும் தினகரன் நமக்குப் போட்டியாக இருக்கக்கூடாது. 20 தொகுதிகளில் நாம எத்தனை தொகுதியில் தோற்றாலும் அது திமுகவிடம் தோற்பதாகத்தான் இருக்க வேண்டும். ஒரு இடத்திலும் அவங்க முன்னாடி வந்துடக் கூடாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் பலர் நம்மகிட்ட வர தயாரா  இருக்காங்க என்று எனக்கு தகவல் வந்துட்டே இருக்கு. ஒருவேலை அவங்க வந்துட்டாங்கன்னா, அவங்கதான் அந்த தொகுதியின் வேட்பாளராக இருக்கும். அவங்களை நிறுத்தினா தி.மு.கவை சமாளிக்கவும் நமக்கு வசதியாக இருக்கும். இல்லன்னா மட்டும்தான் நாம புது ஆளைத் தேடணும். அவங்க 20 தொகுதியில் ஒன்றில்கூட ஜெயிக்கக் கூடாது.

இதுதான் நமக்கு அரசியலில் வாழ்வா? சாவா? என்பதை நிரூபிக்கப் போகும் தேர்தல். அதை மனசுல வெச்சு எல்லோரும் வேலை பார்க்கணும். யாராவது அவங்ககூட ரகசியக் கூட்டணி வெச்சிருக்கீங்க எனத் தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை யாரும் மறந்துட வேண்டாம். இதை அடிமட்ட நிர்வாகி வரை சொல்லிடுங்க’’ என எச்சரித்து வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close