எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 11:53 am
minister-mr-vijayabaskar-press-meet

எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து போக்குவரத்து சேவையை கண்காணிக்க உள்ளேன் என்றும் அவர் கூறினார். 

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் வேலை செய்யும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்கின்றனர். இதனால் இன்று முதல் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், நெரிசலை தவிர்க்க சென்னையில் 6 இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இதுகுறித்து இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "தீபாவளியின் போது பேருந்துகளை முழுமையாக இயக்க தமிழகம் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான். நான் சென்னை சென்று நாளை முதல் 3 நாட்களுக்கு அங்கு இருந்து போக்குவரத்து சேவையை கண்காணிக்க உள்ளேன் தொழிலாளர்கள் அதிகம் உள்ள கோவை, திருப்பூரில் தீபாவளிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close