பட்டாசு வெடிக்கும் நேரத்தை போலீஸ் டீம் அமைத்து அரசு கண்காணிக்குமா? - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 02:17 pm
pon-radhakrishnan-talks-about-diwalil-crackers-ban

தீபாவளி அன்று மக்கள் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு போலீஸ் டீம் போட்டு கண்காணிக்குமா? என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த 2 மணி நேரம் எப்போது என்பதை தமிழக அரசு முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்கலாம் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "தீபாவளி பண்டிகையன்று யார் எப்போது பட்டாசு வெடி வெடிக்கிறார்கள்? என அரசு எப்படி கண்காணிக்க முடியும்? காலங்காலமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் சிதைக்கப்படுவதை மக்கள் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களிடம் இவர்கள் சட்டத்தை புகுத்த பார்க்கிறார்கள். 

பட்டாசு வெடிப்பதில் 90 சதவீதம் குழந்தைகள், மாணவர்கள்தான் ஈடுபடுவார்கள். அவர்களை எதை வைத்து தடுப்பார்கள்? இவர்களை என்ன செய்ய போகிறார்கள்? எல்லா வீட்டுக்கும் போலீஸ் போட போகிறார்களா. இல்லை தெருவுக்கு ஒரு டீம் போட போட்டு கண்காணிக்க போகிறார்களா? அதிக நேரம் பட்டாசு வெடிப்பவர்களை கைது செய்வீர்களா?

தீபாவளியை போலவே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படி செய்வார்களா? கிறிஸ்துமஸ் விழாவில் பட்டாசு வெடிக்கக்கூடாது. ஆடு, மாடு வெட்டக்கூடாது என்று சட்டம் போட தயாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close