பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மூன்றாவது கண்ணே சிசிடிவி: காவல் ஆணையர் விஸ்வநாதன்

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 01:53 pm
chennai-commissioner-speech-about-cctv-camera

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பூக்கடை காவல் நிலைய வளாகத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து அப்குதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளர் தினகரன் மற்றும் வடக்கு மண்டல இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் கலந்து  கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் ஆணையர் கே.விஸ்வநாதன் பேசியதாவது: பூக்கடை மற்றும் யானைகவுனி பகுதியில் 1200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு 50 மீட்டர் தூரத்தையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றத்தை கட்டுப்படுத்த முடியும். காவல்துறை மக்களை முழு நேரமும் கண்காணிக்க முடியாது. மூன்றாவது கண்ணாக  செயல்பட்டு வரும் சிசிடிவி கேமராக்கள் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.

சென்னை பெருநகரம் பாதுகாப்பான நகரமாக இருந்து வருகிறது. பெண்கள். நள்ளிரவில் வெளியில் சென்றாலும் பாதுகாப்போடு இருக்க முடியும் என்பதை சிசிடிவி கேமராக்கள் உறுதி செய்கின்றன உதவுகிறது. திருடு போன பொருட்களை மீட்ட்பதிலும் சிசிடிவி கேமராக்கள் பயன்பட்டு வருகின்றன.  நிறுவனங்கள் மற்றும் கடைகளை நடத்தி வருவோர் அவர்களது பாதுகாப்புக்கான முதலீடாக நினைத்து அனைத்து இடங்களிலும் கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

மேலும், "சென்னை முழுக்க 1, 20,000க்கும் மேற்ப்பட்ட கேமராக்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. மேலும் இந்த CCTV கேமரா பொருத்தும் இயக்கம் தொடங்குவதற்கு முன்பு சென்னை முழுக்க 50000 கேமராக்கள் மட்டுமே இருந்து வந்தன. ஆனால், தற்போது 70000 க்கும் மேற்பட்ட கேமராக்கள் புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதனை அடுத்து சிறு வணிக பகுதிகள், கடைகள், வீடுகள் ஆகிய இடங்களிலிலும் கேமராக்கள் பொருத்தப்படுவதே எங்களின் அடுத்தக்கட்ட இலக்கு" என்றும் சென்னை காவல் ஆணையர் கே.விஸ்வநாதன் அப்போது அறிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close