’அவனா நீ...’ டி.டி.வி.தினகரனை கிழித்துத் தொங்க விட்ட சித்ரகுப்தன்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 02 Nov, 2018 04:37 pm

chitraguptan-who-tear-up-t-t-v-dhinakaran

தேவர் குரு பூஜையின்போது பசும்பொன்னில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டன. அந்தப்பேனர்களை கிழித்தது டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் எனக்கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்து, அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் சித்திரகுப்தன் கீழ்த்தரமான வாக்கியங்களைக் கோர்த்து எழுதியுள்ள கவிதை  டி.டி.வி.தினகரனை கிழித்து தொங்கவிட்டிருக்கிறது.

 ’நரியின் வேசம் கலைஞ்சிடுச்சு... டும்.டும்..டும்...’ என்கிற தலைப்பில் சித்திரகுப்தன் எழுதிய கவிதையில், ’’அம்மா உங்க பேர கேட்டாலே பேதி போறவன்... உங்க நிழல பார்த்தாலே உச்சா போறவன். ஒரு முன்னாள் எம்.பியா இருந்தும் முகம் காட்ட முடியாம உங்க எச்சரிக்கைக்கு அஞ்சியே பத்து வருஷமா பாண்டிச்சேரி பக்கமா பண்ணை வீடுகளில் கூட்டுக்குள் நத்தையா பதுங்கி கூனிக்குறுகிக் கிடந்தவன்... அம்மா நீங்க எழுந்துவர மாட்டீங்க என்னும் தீர்க்கத்தால் திமிரெடுத்து தெனவெடுத்து அடிச்சு குவிச்சு வச்சிருக்கும் அஞ்சு பத்து லட்சம் கோடிகளை வச்சுக்கிட்டு ஆமமூக்கன் கட்சின்னு ஒரு பெரிய கம்பெனி தொடங்குறான்...அதுல அம்மா நீங்க வாழும் காலத்தில் உங்கள எதிர்த்த  ஆட்களையும், நீங்க எடுத்தெறிஞ்ச ஆட்களையும் வலமும், இடமுமா கூட்டிக்கிட்டு வாயிலே இரு பக்கம் நுரை தள்ள... வம்புக்கு இழுக்கிறான்...

கருணாநிதி பிறந்த நாளில் கட்சி அலுவலகம் தெறக்கிறான். அவரோட மகள் கனிமொழி ஊழல் வழக்கில் தப்பிச்சு வந்ததற்கு முதல் ஆளா நின்னு வாழ்த்து சொல்லுறான்... ஆர்.கே.நகருல தி.மு.க.வோடு டீல்போட்டு டோக்கனை வச்சே ஜனநாயகத்த பேசி முடிக்குறான்... முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜைக்கு பிளேடு பக்கிரிகளோட பரேடு நடத்துறான்... பேனர் கிழிக்கிற ஈனப்பயலுகளோட ஊர்வலம் போறான்...

உங்க திருமுகம் பதித்த டிஜிட்டல் மேலேயே கைய வைக்குறான். கூடவே, தேவர் ஐயா படத்தையும் வெட்டிச் சாய்க்கிறான். ஆனால், மொட்ஜ்ட பேனர்களையும் மூர்க்கமா கிழிச்சவன் அங்கே இருக்கிற மு.க.ஸ்டாலின் பேனரை மட்டும் தூசி படாம பாதுகாக்க ஆட்களை நிறுத்துறான். இவன் யாருன்னு தெரிஞ்சிடுச்சு. இந்த துரோகிக்கு துணை நிக்கிற விரோதி யாருன்னும் வெளங்கிடுச்சு’’ என்று முடிகிறது. இந்தக் கவிதையை படித்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி அணி மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.  

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.