டி.டி.வி ஆதரவாளரை இழுத்து மேல்முறையீடு... இடைத்தேர்தலை நிறுத்த எடப்பாடி தந்திரம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 03 Nov, 2018 07:32 am
the-trick-is-to-stop-the-by-election-edappadi-plan

அதிமுகவில் இடைத்தேர்தலுக்காக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிரடியாக நியமித்தார்கள். ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு பொறுப்பாளர்களை நியமித்தாலும், இது டி.டி.வி.தினகரனை உசுப்பேற்றிப் பார்க்கத்தான் என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இது தொடர்பாக விசாரித்தபோது, ‘இடைத்தேர்தல் தனியாக முன்கூட்டியே வருவதை எடப்பாடி விரும்பவில்லை. அப்படி வந்தால் பணம் செலவாகும் என்பதை விட, எத்தனை தொகுதியில் ஜெயிப்போம் என்பது தெரியாது என நினைக்கிறார் எடப்பாடி. தேர்தலை சந்தித்து அதில் தங்களுக்கு பின்னடைவு ஏற்படுவதை ஏன் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்பது அவரது எண்ணம்.

’நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து வந்தால் போதும். ஒருவேளை அப்படி முன்கூட்டியே தேர்தல் முடிவாகும் சூழ்நிலை வந்தால், தினகரன் அணியில் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவரை இழுப்போம். அவரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்குப் போட வைப்போம். அப்படிப் போட்டாலே தேர்தல் என்பது வர வாய்ப்பு இல்லாமல் போய்டும்’ என்பதுதான் முதல்வரின் கணக்கு.


இதுபற்றி அறிந்த அமைச்சர் ஒருவரே தன் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.விடம், ‘பயப்படாதீங்கய்யா.. எலக்‌ஷன்லாம் இப்ப வராது. டிடிவியை பதற்றப்படுத்ததான் இப்படி சில மூவ் பண்றோம்’ என்று சொல்லியிருக்கிறார். அதனால் எடப்பாடியை பொருத்தவரை இடைத் தேர்தலை சந்திக்கத் தயாராக இருப்பது போல பம்மாத்து காட்டினாலும், தேர்தல் வேண்டாம் என்றே நினைக்கிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close