கலைஞர் டிவிக்கு அழகிரி குடைச்சல்... புதிய சேனல் தொடங்கும் மு.க.ஸ்டாலின்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 03 Nov, 2018 08:12 am
alagirit-shuts-off-to-the-kalaignar-tv-m-k-stalin-to-start-a-new-channel

திமுக தரப்பில் இருந்து இன்னொரு புதிய சேனல் உதயம் ஆவதற்கான அனைத்து வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. கலைஞர் தொலைக்காட்சியை மேம்படுத்துவதற்காக 100 கோடி முதலீடு செய்யுமாறு கலாநிதிமாறனிடம் ஸ்டாலின் கேட்டிருந்தார். ஆனால், தற்போது பணமில்லை என கலாநிதி மறுத்துவிட்டார். 

கலைஞர் டிவியை பொலிவுபடுத்துவதில் ஸ்டாலினுக்கு மேலும் ஒரு சிக்கலும் இருக்கிறதாம். அதாவது கலைஞர் தொலைக்காட்சியில் 20 சதவீதம் ஷேர் ஹோல்டராக இருக்கிறார் மு.க. அழகிரி. கனிமொழி, தமிழரசு ஆகியோரிடம் இருந்த ஷேர்களை ஸ்டாலின் கேட்டதும் அவர்கள் திரும்ப ஒப்படைத்துவிட்டார்கள். ஆனால், அழகிரி தனது ஷேரை திரும்பக் கொடுக்க தொடர்ந்து மறுத்துவருகிறார்.

இந்த நிலையில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்து கலைஞர் டிவியை மேம்படுத்தினால் அதில் வரும் லாபம், 20சதவிகிதம் ஷேர் வைத்துள்ள அழகிரிக்கும் போகும். அது போக வேண்டாம் என்று நினைக்கிறாராம் ஸ்டாலின். அதனால், கலைஞர் தொலைக்காட்சியை விரிவாக்கம் செய்வது வீண் வேலை என்று நினைக்கிறாராம். அதேநேரம் வேறு ஒரு யோசனையும் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டு இருக்கிறது. ‘கலைஞர் தொலைக்காட்சியை இப்போது இருக்கிறபடியே விட்டுவிட்டு, புதிதாக ஒரு டிவியை ஆரம்பித்தால் என்ன என்பதுதான் அந்த யோசனை.

முற்றிலும் பொழுதுபோக்கு சேனலாக வரும் அந்த புதிய சேனலுக்கு தளபதி டிவி அல்லது கதிர் டிவி ஆகிய பெயர்கள் வைக்கலாம் என்பது வரைக்கும் ஸ்டாலின் வட்டாரத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close