தி.,மு.க சார்பில் ரூ.100 கோடி முதலீட்டில் புதிதாக தொடங்கப்பட இருக்கும் டிவி சேனலுக்கு பெரும் தொகை கொடுப்பவர்களுக்கு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்படும் என்றும் ஒரு ஆஃபர் திமுக வட்டாரத்தில் உலவிக் கொண்டிருக்கிறது.
கலைஞர் தொலைக்காட்சியை மேம்படுத்துவதற்காக 100 கோடி முதலீடு செய்யுமாறு கலாநிதிமாறனிடம் ஸ்டாலின் கேட்டிருந்தார். ஆனால், தற்போது பணமில்லை என கலாநிதி மறுத்துவிட்டார். முற்றிலும் பொழுதுபோக்கு சேனலாக ஸ்டாலின் உருவாக்கும் வரும் அந்த புதிய சேனலுக்கு தளபதி டிவி அல்லது கதிர் டிவி ஆகிய பெயர்கள் வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக டெல்லியில் இருக்கும் ஸ்டாலின் மருமகன் சபரீசன், கூட்டணி பற்றிய பேச்சுகளோடு இந்த சேனல் தொடங்குவது பற்றிய பூர்வாங்க வேலைகளையும் டெல்லியில் கவனித்து வருகிறாராம். புதிதாகத் தொடங்கப்படும் இந்த டிவிக்கு 100 கோடி ரூபாய் முதலீடு தேவை. அதில், பெரும் தொகை கொடுப்பவர்களுக்கு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்படும் என்றும் ஒரு ஆஃபர் திமுக வட்டாரத்தில் உலவிக் கொண்டிருக்கிறது.
newstm.in