கோவையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 11:35 am
coimbatore-3-dead-for-fever

கோவையில் பன்றிக்காய்ச்சலினால் 2 பேரும், டெங்கு காய்ச்சலினால் ஒரு சிறுவனும் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காய்ச்சல் பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலை மற்றும் பன்றிக்காய்ச்சலினால் பெரும்பாலான மாவட்டங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. காய்ச்சலை தடுக்க அரசு தரப்பிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இன்று கோவையில் காய்ச்சலுக்கு மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயது பெண் ஒருவர், காய்ச்சல் காரணமாக கடந்த 31ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

திருப்பூர் மாவட்டத்தில் மற்றொருவரும் பன்றிக்காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார். அதேபோன்று கோவையில் 5 வயது சிறுவன் ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தான். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close