உண்ட வீட்டுக்கே ரெண்டகமா..? எடப்பாடியிடமே கைவரிசை காட்டிய வளர்மதி..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 07 Nov, 2018 12:28 pm

the-gift-shown-by-the-hand-edappadi-to-valarmadhi

அதிமுகவில் தமிழ்நாடு முழுக்க பேச்சாளர்கள் பட்டியலில் இருப்பவர்கள் 1061 பேர். சென்னையில் உள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் தொடங்கி, மாவட்டங்களில் உள்ள பேச்சாளர்கள் வரை இதில் அடக்கம். ஜெயலலிதா இருந்தவரை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு இந்தப் பேச்சாளர்களுக்கு தீபாவளிப் பரிசு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிமுகவில் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடவில்லை. அதனால், இந்த ஆண்டு ஜெயலலிதா ஸ்டைலில் பேச்சாளர்களுக்கு தீபாவளிப் பரிசு கொடுக்க முதல்வர் முடிவு செய்தார். அதற்கு காரணம், கடந்த வாரத்தில் எடப்பாடி பழனிசாமி கோவை சென்றபோது, அங்கே அவரை சந்தித்த பேச்சாளர் ஒருவர் வறுமையில் வாடுவதாகப் புலம்பியிருக்கிறார்.

இந்த ஆண்டு தீபாவளிக்காக, ஜெயலலிதா இருந்தபோது தயாரிக்கப்பட்ட பேச்சாளர்கள் பட்டியலை எடுத்த எடப்பாடி, அதில் இருக்கும் நட்சத்திரப் பேச்சாளர்கள் மற்றும் முதன்மைப் பேச்சாளர்களுக்குத் தலா 50 ஆயிரம் கொடுக்கலாம் எனச் சொல்லியிருக்கிறார். அடுத்த லெவலில் இருப்பவர்களுக்கு 25 ஆயிரம் எனவும், கடைமட்ட லெவல் பேச்சாளர்களுக்கு 10 ஆயிரம் எனவும் முடிவு செய்திருக்கிறார்.

இது தொடர்பாக அமைச்சர் தங்கமணியை அழைத்துப் பேசிய முதல்வர், ‘நான் கூப்பிட்டு எல்லோருக்கும் கொடுத்தால் அது ஏதோ அஃபிஷியலாக எல்லோருக்கும் கொடுக்கிற மாதிரி ஆகிடும். மத்தவங்களும் எதிர்பார்ப்பாங்க. அதனால அந்த லிஸ்ட்படி பேச்சாளர்களை கூப்பிட்டு கொடுத்துடுங்க. அதுவும் நீங்க கொடுக்க வேண்டாம். எவ்வளவு பணம் ஆகுதுன்னு கணக்குப் போடுங்க. அந்தப் பணத்தை நம்ம வளர்மதிகிட்ட கொடுத்து டிஸ்டிரிபியூட் பண்ண சொல்லிடுங்க. லிஸ்டையும் பணத்தையும் அவங்க கையில் ஒப்படைச்சுடுங்க’ என்று சொல்லி இருக்கிறார்.

அதன்படி அமைச்சர் தங்கமணி, பேச்சாளர்கள் பட்டியலையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் எவ்வளவு என்பதையும் அதில் குறிப்பிட்டு மொத்தத் தொகையை அமைச்சர் வளர்மதியிடம் கொடுத்திருக்கிறார். அதன்படி பேச்சாளர்களுக்கு தீபாவளிப் பரிசுத் தொகையை முன்னாள் அமைச்சர் வளர்மதி வழங்கிவருகிறார். இந்த நிலையில்தான் அமைச்சர் தங்கமணியை நட்சத்திரப் பேச்சாளர் ஒருவர் சந்தித்திருக்கிறார். அப்போது ’உங்களுக்கு 50 ஆயிரம் வந்துடுச்சா... வாங்கிட்டீங்களா?’ என அமைச்சர் விசாரிக்க... , ‘50 ஆயிரமா... இல்லையே 40 ஆயிரம்தானே வளர்மதி அக்கா கொடுத்தாங்க...’ என்று சொல்லியிருக்கிறார். அமைச்சர் தங்கமணி உடனடியாகப் பேச்சாளர்கள் சிலருக்கு போன் போட்டு விசாரித்திருக்கிறார். 50 ஆயிரம் கொடுக்கச் சொன்னவர்களுக்கு 40 ஆயிரமும், 25 ஆயிரம் கொடுக்கச் சொன்னவர்களுக்கு 20 ஆயிரமும், 10 ஆயிரம் கொடுக்கச் சொன்னவர்களுக்கு 8 ஆயிரமும் மட்டுமே கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் உறுதிப்படுத்திக் கொண்டு முதல்வரை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார் அமைச்சர் தங்கமணி.

’’பேச்சாளர்கள் கஷ்டத்துல இருக்காங்கன்னுதான் அவங்களுக்கு கொடுக்கச் சொன்னேன். நாம கொடுத்ததுலயும் எப்படி கமிஷன் அடிக்க இந்தம்மாவுக்கு மனசு வந்துச்சு. அவங்ககிட்ட இல்லாத பணமா? இப்படியா அநாகரீகமா நடந்துக்குவாங்க..? அவங்க மூலமா பணத்தை  கொடுக்கச் சொன்னதே தப்பு. நீங்களே கொடுத்திருக்கலாம். இப்போ எதுவும் அவங்ககிட்ட இதைப் பற்றி கேட்க வேண்டாம். நேரம் வரும்போது பார்த்துகலாம்’’ எனச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.