வரும் தேர்தல்களில் தி.மு.கவுடன் கூட்டணி: வைகோ அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 04:24 pm
mdmk-wants-to-join-with-dmk-for-coming-elections

வரும் தேர்தல்களில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற ம.தி.மு.க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். 

இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வது தவறானது. இளைஞர்கள், குழந்தைகள் ஆர்வ மிகுதியால் நேரம் பார்க்காமல் பட்டாசு  வெடித்துள்ளனர். அவர்களை கண்டித்து விடாமல் கைது செய்வது கண்டிக்கத்தக்கது. 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு தமிழர்கள் விடுதலையில் ஆளுநரின் பதில் கூறாமல் மழுப்பி வருகிறார் என்றும், முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார். 

தொடர்ந்து, வரும் தேர்தல்களில் தி.மு.க கூட்டணியில் இடம்பெறுவது என ம.தி.மு.க முடிவு செய்துள்ளது. ஆனால் ம.தி.மு.கவுடனான கூட்டணி பற்றி தி.மு.க தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு, பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கும்போது, ஆலையை மீண்டும் திறப்பேன் என அதன் அதிபர் கூறியுள்ளது புரியாத புதிராக இருக்கிறது" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close