31 தொகுதிகளில் இடைத்தேர்தல்... தமிழக அரசியலில் திகில் திருப்பம்?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 07 Nov, 2018 04:47 pm
tamilnadu-by-election-in-31-constituencies

 31 தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.,தினகரன் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். 

 கடந்த மாதம் 31ம் தேதி மதுரை ஹோட்டலில் டி.டி.வி.தினகரன் தலைமையில் தகுதி நீக்க எம்.எல்.ஏக்களுக்கான  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.  ஆனால், 2 பேர் மட்டுமே வந்திருக்கிறார்கள்.  16 பேர்கள் வரவேயில்லை.  அதற்கு பல்வேறு காரணங்களை 16 பேர் தரப்பினர் கூறினாலும், சிலர் மேல்முறையீடு  செய்ய வேண்டும் என உறுதியாக இருந்ததுதான் காரணம். ஏற்கனவே தீர்ப்பு வந்தபோதும் இந்த கருத்தை வலியுறுத்தி இருந்தார்களாம். ஆனால், டி.டி.வி.தினகரன், ’தொகுதியில் போய் கருத்து கேட்டு வாருங்கள்’ எனக் கூறியிருக்கிறார்.  

5  தொகுதியில் கேட்டபோது மக்கள், ‘இடைத்தேர்தலை சந்திங்க...’ என்றார்களாம். இதனால் சிலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதனால்தான், கடைசி நேரத்தில் கூட்டத்தைப் புறக்கணித்தாக கூறுகிறார்கள். இந்த 18 பேரில் சிலரை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என தென்மாவட்ட அமைச்சர்களுக்கு ‘அசைன்மென்ட்’ தரப்பட்டுள்ளதாம். இதுஒருபுறமிருக்க, 18 தொகுதிகளோடு திருப்பரங்குன்றம்,  திருவாரூர் தொகுதிகளுடன், மேலும் 11 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரலாம் என டி.டி.வி.தினகரன் தரப்பு உறுதியாக நம்புகிறது.

அதாவது, ஓபிஎஸ் தரப்பு 11 தொகுதி எம்எம்ஏக்கள்,  அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள்.  இந்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. விரைவில் தீர்ப்பு வரலாம் எனவும் பரபரப்பாக இரு தரப்பிப்பினரும் எதிர்பார்க்கிறார்கள். எதிர்த்து ஓட்டு  அளித்துள்ளதால் 11 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு டிடிவி தரப்பில் பலமாக எழுந்துள்ளதாம்.

ஆக மொத்தம் 31 தொகுதிகள் கணக்கு வருகிறது. இதில் போட்டி போட்டு  அ.தி.மு.க-வுக்கு நம் பலத்தை காட்ட வேண்டும் என திட்டமிட்டு வருகிறார் டி.டி.வி.தினகரன். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close