சர்கார் படத்தில் பொய்யான விஷயங்கள் இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது: பொன்.ஆர்

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 11:04 am
pon-radhakrishnan-press-meet

சர்கார் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை, படத்தில் பொய்யான விஷயங்கள் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், "எந்த ஜாதியினரும், தங்களது ஜாதியினை உயர்த்தி பேசுவதில் தவறில்லை, பிற சாதியினரை குறைத்து தான் பேசக்கூடாது. தேவர்மகன் 2 படத்தின் பெயர் குறித்து கிருஷ்ணசாமி என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குத் தெரியாவில்லை. 

பட்டாசுகளை வெடிப்பது குழந்தைகள் தான்.அவர்கள் இந்த வயதில் தான் பட்டாசு வெடிக்க முடியும். அதற்காக குழந்தைகள் நேரம், காலம் பார்க்காது. இதற்காக அவர்களின் பெற்றோர்களை கைது செய்வது ஏற்புடையதல்ல. 

பிரதமர் மோடி அவர்கள் மிகவும் துணிச்சலாக முடிவு எடுத்து கொண்டு வந்த திட்டம் தான் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி. பணமதிப்பிழப்பு நடவடிக்கை சுரண்டல் பேர்வழிகள், கள்ளநோட்டு அச்சடிப்பவர்கள், தீவிரவாதிகள் ஆகியோருக்கு தான் எதிரானது. மக்களுக்கு எதிரானது அல்ல. 

சர்கார் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை, படத்தில் பொய்யான விஷயங்கள் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close