அழுது புரண்டாலும் விஜய், எம்.ஜி.ஆர் ஆக முடியாது - ஜெயக்குமார் விளாசல்

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 11:53 am
minister-jayakumar-press-meet

எம்.ஜி.ஆர் என்பவர் ஒருவர் தான், அழுது புரண்டாலும் நடிகர் விஜய், எம்.ஜி.ஆர் ஆக முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இன்று வீரமாமுனிவரின் 338வது பிறந்தநாளையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட, அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் உள்ளவரை வீரமாமுனிவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். தமிழுக்கு வீரம் தான் முக்கியம். வீரமாமுனிவர், தனது பெயரில் சமஸ்கிருதம் கலக்கக் கூடாது என்று நினைத்தவர்" என்றார்.

தொடர்ந்து சர்கார் பட விவகாரம் குறித்து பதிலளிக்கையில், "அம்மா(ஜெயலலிதா) இருக்கும் போது இப்படியெல்லாம் படம் எடுத்தார்களா? அவர் இல்லாதது குளிர்விட்டு போய்விட்டது. அவர் இருக்கும்போது இப்படி படம் எடுத்திருந்தால் அவர்களின் வீரத்தை பாராட்டியிருப்போம். ஆனால் இப்போது கோழைகளை போல படத்தில் காட்டுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக முதல்வர் போல திரைப்படத்தில் வேடமிடுவார்கள். ஆனால் இதை ஏற்கலாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

எம்.ஜி.ஆர் படங்கள் மீது எந்த காலத்திலாவது விமர்சனங்கள் வந்ததா? உலகம் உள்ளவரை எல்லோராலும் போற்றப்பட கூடியவர் எம்ஜிஆர். ஒரே எம்ஜிஆர் தான். இவர்கள் தலைகீழாக நின்றாலும், அழுது புரண்டாலும், விஜய் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. ஜெயலலிதாவிற்கு ஒருவர் வைத்த பெயரை படத்தில் பயன்படுத்தியுள்ளது சரியல்ல. அதில் உள்நோக்கம் இருக்கிறது. பிறர் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் சர்கார் திரைப்பட குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close