பணமதிப்பிழப்பு தனி மனிதர் ஒருவரால் நிகழ்ந்த பேரழிவு: ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 04:17 pm
mk-stalin-tweet-about-demonetisation

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தனி மனிதர் ஒருவரினால் நிகழ்ந்த பேரழிவு என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 நவம்பர் மாதம் 8ம் தேதி கருப்பணத்தை ஒழிக்கும் பொருட்டு, மத்திய அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால், பாமர மக்கள் தான் மிகவும் அவதிக்குள்ளாகினர் என எதிர்க்கட்சிகள் தற்போது வரை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. மத்திய பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் கருப்பு தினமாக அனுசரித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதனால் அவர்கள் தெருவிற்கு கொண்டு வரப்பட்டார்கள். வரிசையில் காத்திருந்து மக்கள் பலர் உயிரிழந்தனர். பலர் தங்களது வேலையை இழந்தனர். நிறுவனங்கள் பல மூடப்பட்டன. இந்த நடவடிக்கையால்  இந்திய பொருளாதாரம் பின்னோக்கி தான் சென்றுள்ளது. இந்த நடவடிக்கை ஒரு தனி மனிதர் ஒருவரால் நிகழ்ந்த பேரழிவு'' என பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close