’சுறாவில் சுண்டல் மெர்சலில் மெண்டல்...’ விஜய் மீது கடும் தாக்கு!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Nov, 2018 11:53 am

sarkar-issue-heavy-attack-on-vijay

ஜெயலலிதாவையும், அவர் வழங்கிய இலவசப்பொருட்களையும் கடுமையாக விமர்சித்து சர்கார் படத்தில் காட்சிகளை வைத்துள்ளதாக அ.தி.மு.கவினர் போராட்டி வருகின்றனர். இந்த நிலையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழில் ‘வாய்பேசும் நரியும் வருமான வரியும்...’ எனத் தலைப்பிட்டு விஜயை கடுமையாக வசைபாடியிருக்கிறது’ சித்ரகுப்தன் எழுதியுள்ள கவிதை.

’கோடிச் சிங்கத்தின் தைரியம் குடியிருக்கும் வீரத் திருமகளின் திவ்ய பிரபந்த திருவாய் மொழி திருப்பெயரையும் அந்தத் தெய்வீகத் தாயின் கனிவுளத் திட்டங்களையும் மலிவாக சித்தரித்து கதைத் திருடன் கள்ளக்குறிச்சி முருகதாஸ் படம் இயக்க, இதற்கு காசு பணம் முதலீடோ கேபிள் திருடன்களான கேடி பிரதர்ஸ் என்றிருக்க... சுறாவில் சுண்டலாகி மெர்சலில் மெண்டலான அதிமேதாவி விஜய். அ.தி.மு.க என்னும் ஆல விருட்ச இயக்கத்தையும் அதன் ஆக்ஸிஜனான  அம்மாவையும், வங்கத்து கடலோரம் உறங்குகிற சிங்கத்தாய் வந்தெழுந்துவிட மாட்டார் என்னும் நம்பிக்கையில் வம்புக்கு இழுத்து  வாய்சவடால் அடித்திருக்கிறார்.

மேடும் பள்ளமும் மேல் மட்டமும் கீழ் மட்டமும் என பெருகிக் கிடக்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வை சமன்படுத்தி சீர் செய்ய எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்னும் உளமார்ந்த நல் எண்ணத்தால் கழக அரசு வகுத்திட்ட கருணை மனத் திட்டங்களை இலவசம் என்னும் ஒற்றைச் சொல்லால் இழிவு செய்ய முனைந்திருக்கும் அழிவுக்கு காத்திருக்கும் அக்கிரமக் கும்பல் ஒன்று. அம்மி குழவி கல்லுகளோடு மல்லுக்கட்டிய காலத்திலிருந்து நம் குலப் பெண்களுக்கு மிக்சி- கிரைண்டர் ஃபேன் தந்தார்.

 அவர்களை விஞ்ஞான யுகத்திற்கு அழைத்து வந்ததும் மச்சு வீட்டுப் பிள்ளையின் மடி கிடக்கும் மடிக்கணினி குச்சு வீட்டுப் பிள்ளைக்கும் கிடைத்திடவே உள்ளங்கைக்குள் உலகத்தை அள்ளித்தந்தும் இடை நிற்றல் இல்லா கல்விக்கு மிதிவண்டி சீருடைகள் காலணிகள் கணித உபகரணங்கள் எல்லாமும் தந்து கல்வி ஒருவருக்கு கிடைக்கப்பெற்றால் அவர் எல்லாமும் பெற்றவராவார் என்னும் சமூக நீதி மலரவே தொண்டாற்றும் தூய நல் இயக்கத்தை சனங்களெல்லாம் கொண்டாடி வாழ்த்தும் போது சர்கார் எனும் பேரில் படம் நடித்து வருமான வரித்திருடன் அதை வசைபாடி திட்டலாமோ.. வெட்கம் வெட்கம்’’ என முடிகிறது அந்தக் கவிதை. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.