கேபிள் திருடன்... கதைத் திருடன்... வருமான வரி திருடன்; விஜய்க்கு குறி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Nov, 2018 12:31 pm
reel-thief-and-real-thief-attack-on-vijay

சர்கார் படத்தில் ஜெயலலிதாவை விமர்சித்ததற்காக அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா படக்குழுவினரை கடுமையாக விமர்சித்துள்ளது. 

குத்தீட்டி என்னும் பெயரில் ‘ரீல் திருடனும் ரியல் திருடனும்’ என்கிற தலைப்பில் இன்று வெளியாகி உள்ள கட்டுரை சர்கார் பட இயக்குநர் முருகதாஸ், விஜய், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோரை குறி வைத்து தாக்கியுள்ளது. ’’கேபிள் திருடன் படம் எடுக்க... கதை திருடன் படம் இயக்க வருமான வரி ஏய்க்கிற கதாநாயகத் திருடன் சினிமா நடித்து கற்பனையில் ஏதோ தங்களை முதலமைச்சர் போல் நினைத்துக் கொண்டு ஏகத்துக்கும் தத்துவங்களை கக்குவது என்பது சில இலுமிநாட்டிகளுக்கு பொழப்பா போச்சு...

சமன்பாடற்றுக் கிடக்கிற பொருளாதார மேடு பள்ளங்களை சமன் செய்யவும் வறிய நிலையில் வாடிக்கிடக்கும் மக்களுக்கு வசதியுள்ள மக்கள் அனுபவிக்கிற வாய்ப்புகளை கருணை உள்ளத்தோடு அரசாங்கம் உருவாக்கித் தருவதென்பது சமீக நீதி தத்துவத்தின் அடிப்படையிலானது’ என விவரித்து இருக்கும் அந்தக் கட்டுரையில், ‘சினிமாவை பொழுது போக்காக கருதுகிற மக்களிடம் அதனை சமூகத்தின் பழுது நீக்குகிற புரட்ட்சிகர ஆயுதமாக மாற்றியது அன்றைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., பேரறிஞர் அண்ணா போன்றோர் என்றால்... இன்றைக்கு அந்த மக்கள் திலகத்தின் உருவத்தில் தங்களை சித்தரித்துக் கொள்கிற சில லூசுக் கோமாலிகள் அவர் வழி அரசின் கருணையே வடிவிலான திட்டங்களை உண்மைக்கு மாறாக உள்நோக்கம் கற்பித்து காயப்படுத்துவது கடும் கண்டனத்திற்கு உரியது. இதனை தொடர்ந்து செய்பவர்கள் வெகு விரைவில் கலையுலகிலிருந்தே காணாமல் போகப்போவது உறுதி. 

கொசு மருந்து அடிப்பது சுகாதாரத் துறையின் வேலை என்றிருக்க அதனை பொதுப்பணித்துறையின் பொறுப்பு என்பதாக அடிப்படை அறிவுகூட இல்லாதவன் படம் இயக்குகிறான் என்றால், அப்பிழை தனை அறியாமல் திரையில் ஒருவன் அதனை வசனமாக பேசுகிறார்ன் என்றால் இயக்குநர் கூமுட்டையிலும் மோசமான அடி முட்டாள அவரல்லவா..?

இந்த லட்சணத்தில் தங்களுக்கு என்று அடைமொழி வேறு...  தன்னிடம் இருந்து இச்சமூகம் பெற்றதெல்லாம் நல்லவை மட்டுமே என்பதிலே பொறுப்பாகவும், நெருப்பாகவும் வாழ்ந்த புரட்சித் தலைவரின் அரசையும், ‘என் மக்கள் யாரிடமும் எதற்காகவும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவதே என் லட்சியம்’’ என்று பிரகடனம் செய்து விட்டுப்போன புரட்சித் தலைவியின் நன்னோக்கத்தையும், நிழலிலும், நிஜத்திலும் இவர்கள் போன்ற அட்டைக்கத்திகளால் ஒரு நாளும் களங்கப்பத்த முடியாது... போங்கடா போங்கடா பைத்தியக்கார பசங்களா?’ எனக் கடுமையாகத் தாக்கி இருக்கிறது அந்தக் கட்டுரை.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close