விஜய் ரசிகர்களின் வீட்டிலும் இலவச பொருட்கள் உள்ளன: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 01:10 pm
minister-rp-udhayakumar-press-meet-over-sarkar-issue

ஜெயலலிதாவின் திட்டங்களால் மக்கள் பலர் பயனடைந்துள்ளனர், விஜய், அஜித் ரசிகர்களின் வீட்டிலும் தமிழக அரசு அளித்த இலவசப் பொருட்கள் உள்ளன என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

சர்கார் படத்தில் அ.தி.மு.க மற்றும் ஜெயலலிதாவின் பெயர் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டுள்ளனர். படத்தின் மறு தணிக்கை பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த சூழ்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "சர்கார் திரைப்படத்தில் வைக்கப்பட்டதைப் போல் வரும் மற்ற படங்களிலும் இதுபோன்ற காட்சிகளை வைப்பார்கள் என்பதால் இதனை அனைவரும் எதிர்க்கிறோம். இனியாவது திரைத்துறையினர் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். 

மறைந்த தலைவர்களை வம்புக்கு இழுக்கக்கூடாது. ஜெயலலிதாவின் திட்டங்களால் மக்கள் பலர் பயனடைந்துள்ளனர். ஏன்? விஜய், அஜித் ரசிகர்களின் வீட்டிலும் அவர் அளித்த இலவசப் பொருட்கள் இன்னும் இருக்கின்றன. மாணவிகளுக்கான இலவச சைக்கிள், மடிக்கணினி உட்பட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செய்துள்ளார். ஜாதி, மத பாகுபாடின்றி ஜெயலலிதா அனைத்து மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தியவர். அவரை கொச்சைபடுத்த வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close