முடிவுக்கு வந்தது சர்கார் சர்ச்சை... விஜய் நிம்மதி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 09 Nov, 2018 01:06 pm
end-the-sarkar-controversy-vijay-is-silent

தமிழக அரசியல் நிலவரத்தை மிக கடுமையாக விமர்சித்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சர்கார். அ.தி.மு.க அரசின் நலத்திட்டங்களை மிகவும் வன்மமான வசனங்களால் நடிகர் விஜய் வறுத்தெடுக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லியை வில்லியாக நடித்துள்ள வரலட்சுமிக்கு சூட்டியிருந்தார் இயக்குனர் முருகதாஸ். 

சர்கார் எனப் பெயர் சூட்டியபோதே இந்தப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கதை திருட்டு விவகாரத்தில் மட்டுமே சிக்கி படம் தீபாவளிக்கு ரிலீசானது. படத்தை பார்த்த அ.தி.மு.கவினர் கொந்தளித்தனர். படம் ஓடும் திரையரங்குகளை முற்றுகையிட்டனர். விஜயின் பேனர்கள், போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்யும் நிலையும் ஏற்பட்டது. இதனை எதிர்பார்க்காத விஜயும், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனும் வசூல் பாதிக்கப்படும் என கலங்கினர். 

சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகளை நீக்க வலியுறுத்தினர். தீவிரவாதத்தை தூண்டும் விதமாக விஜய் பேசியிருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் முருகதாஸ் தாம் கைது செய்யப்படலாம் என முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அடுத்து விஜயும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.  சர்கார் படம் திரையிடப்பட்டிருந்த திரை அரங்குகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.  இதைத் தொடர்ந்து சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள கோமளவல்லி என்று அழைக்கப்படும் காட்சியையும், தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறி மிக்சி, கிரைண்டர் தீ வைக்கப்படும் காட்சியையும் மறு தணிக்கையில் தணிக்கை குழுவினர் நீக்கியுள்ளனர்.

இனி போராட்டங்கள் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அச்சத்தில் இருந்த விஜயும், படக்குழுவினரும் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனாலும், அ.தி.மு.கவினர் தங்கள் மீது கோபத்தில் இருப்பதால் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சமரசம் பேச முயற்சி செய்து வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close