சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் இடமாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 03:54 pm
huluvadi-g-ramesh-transferred-from-madras-hc-to-mp

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி குலுவாடி ஜி .ரமேஷ் மத்திய பிரதேச மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீதிபதி குலுவாடி ஜி .ரமேஷ் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் முதலில் கர்நாடக மாநில மாவட்ட நீதிபதியாக நீதிபதியாக இருந்து மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். இறுதியில் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யபட்டார். 

சென்னை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியாக இருந்த அவர், தற்போது மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் 3 வது மூத்த நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இடமாற்றத்தை ரத்து செய்வது குறித்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.ஆனால், வருகிற நவம்பர் 22 ம் தேதிக்குள் அவர் பொறுப்பேற்க வேண்டுமென ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close